பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள விசுவக்குடி கிராமத்தில் இன்று ஏழாவது ஆண்டாக தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் கோட்டாட்சியர் அனிதா கொடி அசைத்து இந்த ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தார். இந்த போட்டியில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் சீறி பாய்ந்து வந்த காளைகளை ஆர்வமுடன் அடக்கி பரிசுகளை வென்றனர். வெற்றி பெற்ற காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.