பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் "உங்க கனவ சொல்லுங்க" எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நேரலையில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் மகளிர் சுயஉதவிக்குழு தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டைகளையும், படிவங்களையும் வழங்கினார்கள். இத்திட்டம் சுயஉதவிக்குழுக்களின் கனவுகளை நிறைவேற்றும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது.