பெரம்பலூர்: மதுரை முத்து கலந்து கொண்ட பட்டிமன்ற நிகழ்ச்சி

84பார்த்தது
பெரம்பலூர்: மதுரை முத்து கலந்து கொண்ட பட்டிமன்ற நிகழ்ச்சி
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்து பெரம்பலூர் நகராட்சித் திடலில் நடத்தும் 9வது பெரம்பலூர் புத்தக திருவிழாவின் நான்காம் நாளான (03.02.2025) நிகழ்ச்சிகளை ஆதவ் பப்ளிக் பள்ளி ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியில் இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம் கலந்து கொண்டு "பூமிக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை" என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவி புகழ் மதுரை முத்து நடுவராக கலந்து கொண்டு "மாணவர்கள் முன்னேற்றத்தில் அதிக பங்கு பெற்றோர்களா? ஆசிரியர்களா?" என்ற தலைப்பிலான பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஏராளமான பொதுமக்களும், மாணவ மாணவிகளும் வருகை தந்து புத்தக அரங்குகளைப் பார்வையிட்டு, சிந்தனை அரங்கின் நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டு கேட்டு மகிழ்ந்தனர். ஐந்தாம் நாளான இன்று (04.02.2025) சொல்வேந்தர் சுகி. சிவம் அவர்கள் "பொய்யிலே பிறந்து" என்ற தலைப்பிலும், எழுத்தாளர் அகரமுதல்வன் அவர்கள் "தீதெலாம் நலிக" என்ற தலைப்பிலும், மதுரை கடம்பவனம் சித்ரா கணபதி அவர்கள் "தமிழர் - வேரும் விழுதும்" என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்க உள்ளார்கள்.