பிரம்மரிஷி மலையில் மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

0பார்த்தது
பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமத்தில் உள்ள பிரம்மரிஷி மலையில், 43ஆம் ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இன்று மாலை, 2,100 மீட்டர் திரி, 1008 லிட்டர் நெய், 108 கிலோ கற்பூரம் மற்றும் 5 அடி செப்பு கொப்பரையில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மகா சித்தர்கள் டிரஸ்ட் நிர்வாகி தவசிநாதன் தீபம் ஏற்றினார். எளம்பலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you