பெரம்பலூர்: பக்கத்து வீட்டுக்காரரை கம்பியால் தாக்கியவர் கைது

52பார்த்தது
பெரம்பலூர்: பக்கத்து வீட்டுக்காரரை கம்பியால் தாக்கியவர் கைது
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 50). இவரது வீட்டு அருகே வசிப்பவர் ஆறுமுகம் (40). இவரை கோவிந்தராஜ் மதுபோதையில் இரும்புக் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதில் ஆறுமுகம் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாடாலூர் போலீசில் ஆறுமுகம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி