பெரம்பலூர் மாவட்டத்தில் தனிப்படையினர் நடத்திய சோதனையில், சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (25) என்பவர் வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வெங்கடேஷை கைது செய்து, அவரிடமிருந்து மொத்தம் 106.822 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளனர். கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல்களை காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தெரிவிக்கலாம் என்றும், தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.