பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா தலைமையில், சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் S. மனோஜ் மற்றும் சிவனேசன் ஆகியோர் வங்கி கிளை மேலாளர்களுடன் சைபர் குற்றங்கள் குறித்து இன்று (11.02.2026) கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினர். திருச்சி மண்டல காவல் துறை தலைவர் வே. பாலகிருஷ்ணனின் உத்தரவின்படி இந்த கூட்டம் நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் மேற்பார்வையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.