புதிய நியாய விலை கடை கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்

0பார்த்தது
புதிய நியாய விலை கடை கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி, வேப்பந்தட்டை ஒன்றியம், வேப்பந்தட்டை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 13.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலை கடை கட்டடத்தை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.