போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேனூர், செட்டிக்குளம் உள்ளிட்ட 14 இடங்களில் புதிய பேருந்து வழித்தடங்களை இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் பெரம்பலூர் மற்றும் குன்னம் கிளையிலிருந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயனடைவார்கள்.