பெரம்பலூர் மாவட்டத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், 983 பயனாளிகளுக்கு ரூ. 2.3 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெரம்பலூர் தனலட்சுமி கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர், மாவட்ட கலெக்டர் மிருணாளினி தலைமையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ பிரபாகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.