பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 2,201 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.06 கோடி மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் அண்மையில் வழங்கினார். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி முதலமைச்சர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், மாணவர்கள் நன்கு படித்து சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக உருவாக வேண்டும் என்றும், அரசு உதவ தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அரசுத் திட்டங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள அறிவுறுத்தினார்.