பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் கி. சிவக்குமார் இன்று பார்வையிட்டார். உணவுப் பொருட்கள் வைப்பறை, சமையற்கூடம், உணவருந்தும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர், உணவகத்தை தூய்மையாகப் பராமரிக்கவும், கழிவுநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.