பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பத்திர பதிவுத் துறை சார்பதிவாளர் அலுவலகத்தில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.