பெரம்பலூர் மாவட்டத்தின் 29வது மாவட்ட வருவாய் அலுவலராக க. கண்ணன் இன்று (13.11.2025) பொறுப்பேற்றுக் கொண்டார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், வருவாய்த் துறையில் தட்டச்சராகப் பணியைத் தொடங்கி, தட்டச்சர் முதல் வட்டாட்சியர் வரை விருதுநகரில் பணியாற்றியுள்ளார். ஜூலை 2023ல் மதுரை மாவட்ட தனித்துணை ஆட்சியராகவும், செப்டம்பர் 2024ல் திருமங்கலம் கோட்ட வருவாய் கோட்டாட்சியராகவும், ஜனவரி 2025ல் சென்னை எழுதுபொருள் அச்சுத்துறையில் இணை இயக்குநர்/மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றியுள்ளார். இன்று பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலராகப் பொறுப்பேற்ற இவரை, வருவாய்த்துறை மற்றும் பிற துறை அலுவலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.