பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் நெய்க்குப்பை கிராமத்தில், பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன், மற்றும் ஸ்ரீ பெரியநாயகி, ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மருதையான் ஸ்ரீ பாவாடைராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் அடங்கிய கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகாகும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோவில் கோபுரம் கொண்டுவரப்பட்டு அங்கு கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து, கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பர்வத ராஜகுல மீனவ சமூக குடிப்பாட்டு மக்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.