நவம்பர் புரட்சி தின சிறப்பு பேரவை கூட்டம்

0பார்த்தது
நவம்பர் புரட்சி தின சிறப்பு பேரவை கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நவம்பர் புரட்சி தின சிறப்பு பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். கட்சியின் கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை ஏற்றி வைத்தார். மாநில குழு தொழிலாளி வர்க்கத்தின் சாதனைகள் குறித்து கருத்துரை வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலையரசி, ஏ. கே. ராஜேந்திரன், ரெங்கநாதன், டாக்டர் கருணாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கட்சி இடைக்கமிட்டி உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், உறுப்பினர்கள், வர்க்க வெகு ஜன அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி