பெரம்பலூரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

2பார்த்தது
பெரம்பலூரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் சகுந்தலா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கை கைவிட வேண்டும், பறிக்கப்பட்ட செவிலியர் கண்காணிப்பாளர் தரம் 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதி 356-ஐ நிறைவேற்ற வேண்டும், தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மருத்துவத்துறை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், 11 மாத கால ஒப்பந்த பணி முறையை ஒழிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.