பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் வெடி வைக்கும்போது ஏற்பட்ட மண் சரிவில் கோதூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி உயிரிழந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த பரத் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் எஸ்.பி. அனிதா சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். இரவு நேரம் என்பதால் மீட்புப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. பாடாலூர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.