பெரம்பலூர்: பாதாள சாக்கடை அடைப்பினை சரி செய்ய வேண்டி சாலை மறியல்

59பார்த்தது
பெரம்பலூர்: பாதாள சாக்கடை அடைப்பினை சரி செய்ய வேண்டி சாலை மறியல்
பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள அரனாரை பிரிவு ரோடு அருகே பாதாள சாக்கடை அடைப்பினால் கடந்த ஒரு வார காலமாக கழிவு நீர் குடியிருப்பு பகுதிகளில் வெளியேறுவதால் பாதாள சாக்கடை அடைப்பினை சரி செய்ய வேண்டி இன்று பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்களிடம் பெரம்பலூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி