பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்கள் விவசாய நிலங்களைப் பாதிக்கும் கிரஷர் ஆலையைத் தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். கிராமத்தில் விவசாயமே பிரதானமாக உள்ள நிலையில், கிரஷரால் விவசாயம் பாதிக்கப்படும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.