பெரம்பலூர்: ஜல்லிக்கட்டு போட்டி காவலர்கள் உள்பட 79 பேர் காயம்

0பார்த்தது
பெரம்பலூர்: ஜல்லிக்கட்டு போட்டி காவலர்கள் உள்பட 79 பேர் காயம்
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே பூலாம்பாடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், 616 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில், 318 மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா். காளைகளை அடக்க முயன்ற 28 வீரா்கள், 43 காளை உரிமையாளா்கள், 2 காவலா்கள் மற்றும் 5 பாா்வையாளா்கள் என மொத்தம் 79 போ் காளைகள் முட்டியதில் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், காவலா்கள் மற்றும் காளை உரிமையாளா் ஒருவா் என மூவா் தீவிர சிகிச்சைக்காக பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த போட்டியில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி