பெரம்பலூா் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீசி ரவுடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை காமராஜபுரத்தைச் சோ்ந்த காளிமுத்து (வெள்ளக்காளி) என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில், ஏற்கனவே 7 போ் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மதுரை கீரைதுறையைச் சோ்ந்த முனியசாமி (63) மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த வேல்முருகன் (53) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.