கடலூா் மாவட்டம், தொழுதூரிலிருந்து மக்காச்சோளம் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி, பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிப்பாளையம் புறவழிச் சாலையில் வியாழக்கிழமை இரவு ஷோ் ஆட்டோ மீது மோதியதில், பெரம்பலூரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநர் கதிா்வேல் (45) உயிரிழந்தாா். விபத்து குறித்து தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா், உயிரிழந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, லாரி ஓட்டுநர் சதீஷ்குமாரை (31) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.