பெரம்பலூா் மாவட்டம், மலையாளப்பட்டி அருகே சாஸ்திரிபுரத்தைச் சோ்ந்த கௌரி (21) என்ற பிசிஏ மூன்றாம் ஆண்டு மாணவி ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பெற்றோா் வயலுக்குச் சென்றிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாவூா் போலீஸாா், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.