தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில், பெரம்பலூரில் 10வது புத்தகத் திருவிழா வருகிற பிப்ரவரி 27, 2026 முதல் மார்ச் 8, 2026 வரை நடைபெற உள்ளது. புதிய பேருந்து நிலையம் எதிரில் நடக்கும் இந்த விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறும். மாவட்ட நிர்வாகமும், மக்கள் பண்பாட்டு மன்றமும் இணைந்து நடத்தும் இந்த விழாவில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.