பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான கணினி வழி போட்டித் தேர்வு வரும் 16.11.2025 அன்று (ஞாயிற்றுக்கிழமை) எளம்பலூரில் உள்ள ரோவர் பொறியியல் கல்லூரி மற்றும் சிறுவாச்சூரில் உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மையங்களில் காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் 400 பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணிக்கும், பிற்பகல் 2 மணிக்கும் மேல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் கைப்பேசி, மின்னணு சாதனங்கள் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்து வரக்கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.