தமிழ்நாட்டைச் சார்ந்த 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில், ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவர்களுக்கு தலா ரூ. 37,000 மற்றும் 50 கன்னியாஸ்திரிகள்/அருட்சகோதரிகளுக்கு தலா ரூ. 60,000 மானியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 01.11.2025-க்குப் பிறகு புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது www.bcmbcmw.tn.gov.in இணையதளத்தில் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 28.02.2026-க்குள் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.