பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

84பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தாங்கள் ஏற்கனவே பயன்படுத்திவரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை 31.03.2025 வரை செல்லுபடியாக்கப்பட்டிருந்த பேருந்து பயண அட்டைகளின் மூலமாகவே மேலும் மூன்று மாதங்கள் 30.06.2025 வரை பயன்படுத்திக்கொள்ளலாம். 

மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் வழியாக உடனடியாகப் பெறும் வசதியை அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை (TNEGA) வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை செயல்படுத்த போதிய காலஅவகாசம் தேவைப்படுகின்ற நிலையில் ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்திவரும் 31.03.2025 வரை செல்லுபடியாக்கப்பட்ட கட்டணமில்லா பயண அட்டைகளை 30.06.2025 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி