பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் கிட்டங்கிகள் மற்றும் அனைத்து உட்கட்டமைப்புகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். தேசிய வேளாண் சந்தை (e-NAM) செயல்பாடுகளை மேம்படுத்தவும், பண்ணைவாயில் விற்பனை முறையினை துரிதப்படுத்தவும் அவர் அறிவுறுத்தினார். இதன் மூலம் அதிகப்படியான விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்று பயன்பெற வேண்டும் என்பதே நோக்கமாகும்.