பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளி, டி. இ. எல். சி பள்ளி மற்றும் நேஷனல் தொழிற்பயிற்சி மையம் ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி நேரில் சென்று ஆய்வு செய்தார். வாக்காளர்கள் எவ்வித தவறுமின்றி கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்ய உதவிடவும், சந்தேகங்களுக்கு உரிய பதில் அளிக்கவும், கனிவுடன் நடந்து கொள்ளவும், பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்கவும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வுகளில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் அனிதா, உதவி வாக்காளர் பதிவு அலுவலர்/பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த ஆய்வு 23.11.2024 அன்று நடைபெற்றது.