பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் தெரணி கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய பனை மரக்காடு திட்டத்தின் கீழ் 23.9.2025 அன்று ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி தொடங்கி வைத்தார். நேற்று, நடவு செய்யப்பட்ட பனை மரங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.