பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் 'தாயுமானவர்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்திற்கான குடிமைப் பொருட்கள் மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வீடுகளுக்கே நேரில் வந்து வழங்கப்படும்.