பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினரின் குறைகளைத் தீர்ப்பதற்காக சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த குறை தீர்க்கும் கூட்டம் வருகிற ஜூன் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.