பெரம்பலூர்: 11ம் தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

0பார்த்தது
பெரம்பலூர்: 11ம் தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மே 6ஆம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதனால், தேர்தல் காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 11ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், 13ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் சிறப்பு மனுக்கள் முகாம்கள் நடைபெறும்.