பெரம்பலூா் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடா்ந்து, புகா் பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட 49 பெண்கள் உள்பட 103 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.