பெரம்பலூர்: கோயில் நிலத்தை விற்றதை கண்டித்து சாலை மறியல்

0பார்த்தது
பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சியில் உள்ள பழமை வாய்ந்த பஞ்ச நதீஸ்வரர் சிவன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, அறநிலையத்துறை சில ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட நலத்துறைக்கு விற்று, இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளது. இதனை அறிந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கோவில் நிலத்தை கொடுக்க முடியாது என பெரம்பலூர் - துறையூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, விசாரணை செய்யப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி