பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி சாருபாலா, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்ற இந்திய வலுதூக்கும் கூட்டமைப்பின் சுப்ரதா கிளாசிக் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். சீனியருக்கான வலுதூக்கும் போட்டியில் 84 கிலோ எடைப்பிரிவில் 230 கிலோ தூக்கி முதலிடம் பிடித்தார். மேலும், ஜூனியருக்கான வலுதூக்கும் போட்டியில் 84 கிலோ எடைப்பிரிவில் 100 கிலோ தூக்கி இரண்டாம் இடத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் தாளாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.