பெரம்பலூா்: பாலியல் தொல்லை.. முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

3பார்த்தது
பெரம்பலூா்: பாலியல் தொல்லை.. முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
பெரம்பலூா் மாவட்டத்தில், கடந்த மே மாதம் 14 வயது பள்ளி மாணவிக்கு பேருந்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த ரத்தினம் (60) என்பவருக்கு, போக்சோ சட்டத்தின் கீழ் பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றம் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து ரத்தினம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.