பெரம்பலூர் எஸ்.பி கடும் எச்சரிக்கை

0பார்த்தது
பெரம்பலூர் எஸ்.பி கடும் எச்சரிக்கை
பெரம்பலூரில் சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்கள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். அனிதா எச்சரிக்கை விடுத்துள்ளார். தலைக்கவசம் அணியாதவர்கள், வாகன உரிமம் இல்லாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், ரூ. 2,500 அபராதம் செலுத்தினால் மட்டுமே வாகனங்கள் விடுவிக்கப்படும் என்றும் ஒரு செய்தி பரவி வருகிறது. இது முற்றிலும் தவறானது என்றும், இதுபோன்ற செய்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.