பெரம்பலூர் நகராட்சி, பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்யும் பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்ததை திரும்பப் பெறக் கோரி, சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர் சங்கம் (CITU) சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் மனு அளித்தனர். இந்த வரையறை தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு பாதகமாக இருப்பதாகவும், கடை முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு முன்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மனு அளித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.