பெரம்பலூர்: தமிழக கேபிள்டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் சார்பில் மனு

78பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் புதியவர்களுக்கு LCO வழங்குவதை தடுக்க கோரியும், ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு அரசு பாக்ஸ் இல்லாததால் தனியார் பாக்ஸ்களை வழங்கி வந்த நிலையில் அதை எடுத்து விட்டு அரசு பாக்ஸை போட வேண்டும் என்று நிர்பந்திப்பதை தடுக்க கோரியும், மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் - TCOA சார்பில் இதற்கான கோரிக்கை மனு அளித்து வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் நல்லுசாமி தலைமையில், கோரிக்கை மனு அளித்தனர்.இந்த மனு வழங்கும் நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் மாவட்ட தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி