பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அடைக்கம்பட்டி ஊராட்சியில், தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் (19.11.2025) அன்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில் முதலமைச்சர், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றன. சுமார் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு, தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.