பெரம்பலூர் மாவட்டம் பாடலூரிலிருந்து தெரணி செல்லும் சாலையில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகன் உமேஷ் (36) என்பவர் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், இவருடன் மது விற்பனையில் ஈடுபட்ட தப்பி ஓடிய கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.