பெரம்பலூர்: அரசு கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

78பார்த்தது
பெரம்பலூர்: அரசு கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
திருச்சி மண்டல காவல் துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின்படியும், திருச்சி சரக்கு காவல் துறை துணைத் தலைவர் வருண்குமார் அறிவுறுத்தலின்படியும், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா வழிகாட்டுதலின்படியும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் (தலைமையிடம்) மேற்பார்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) தலைமையில் 18.03.2025 ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் ஆரோக்கியராஜ் (பெரம்பலூர் உட்கோட்டம்), பிரபு (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்) நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஸ்வரன், சைபர் குற்றங்கள் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மனோஜ், உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) சிவனேசன், புள்ளியியல் ஆய்வாளர்கள் சாகித் மற்றும் வசந்தா ஆகியோர்கள் இணைந்து 1. சமூக நீதி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு 2. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் தொடர்பான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு 3. சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு 4. கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீங்குகள் பற்றிய விழிப்புணர்வு 5. சாலை மற்றும் போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி