பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் பெண்குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து இன்று பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். குழந்தை திருமணம் தடுப்போம் என்றும் உறுதிமொழி எடுத்தும், போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். காவல் ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்துவம், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள்.