பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து, நிறுவன மேலாளர் ஜெகதீசன், ஒருங்கிணைப்பாளர் செல்வம், மாவட்ட உடல்நல அலகு சீனிவாசன் மற்றும் இளங்கோவன், மாவட்ட புகையிலை தடுப்பு மருத்துவர் டாக்டர் வனிதா, புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் தென்றல், (ONE STOP CENTER) case worker சௌந்தர்யா, களப்பணியாளர் மணிமாறன் ஆகியோர் இணைந்து பெரம்பலூரில் உள்ள ஜெயராமன் திறன்மேம்பாட்டு மையத்தில் பயிலும் மாணவ மாணவிகளிடம் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் புகையிலை ஒழிப்பு தினமான இன்று போதைப்பழக்கத்திற்கு அடிமையாவதை தடுப்போம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். பின்னர் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்துவம், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற உயிருக்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்களை உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை அருந்தி உயிரிழப்பவர்களின் குடும்பங்கள் படும் துயரங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.