பெரம்பலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

554பார்த்தது
பெரம்பலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
பெரம்பலூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளதால், பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், சங்குப்பேட்டை, துறைமங்கலம் 4-ரோடு அரணாரை, ஆலம்பாடி ரோடு, செங்குணம், எளம்பலூர், சிட்கோ தொழிற் பேட்டை, அருமடல் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின்சாரம் தடைபடும்.

தொடர்புடைய செய்தி