மத்திய மோடி அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

233பார்த்தது
தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறி, மத்திய மோடி அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பெரம்பலூர் நகர திமுக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர். மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய முறையான நிதிப் பங்கீட்டை வழங்காமலும், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை முடக்குவதாகவும் கூறி மத்திய அரசை கண்டித்து முழக்கமிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி