பெரம்பலூர் மாவட்ட திராவிட கழகம் சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், புதிய பேருந்து நிலையம் பகுதியில் அதன் மாவட்டத் தலைவர் தங்கராசு தலைமையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையின் மூலம் கட்டாய இந்தி திணிப்பு இருப்பதாக கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழி கொண்டுவந்து, அதன் மூலம் இந்தி திணிப்பை கட்டாயமாக்கியுள்ளதாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து முழக்கமிடப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள், திராவிடர் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.