அரசு பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள் போராட்டம்.

0பார்த்தது
பெரம்பலூரில் இருந்து கிளியூர் வரை செல்லும் அரசு பேருந்து, கூடுதல் வழித்தடத்தில் இயக்கப்படுவதால் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்குச் செல்லவும், பணிக்குச் செல்லவும் குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை எனப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பழைய வழித்தடத்தில் பேருந்தை இயக்கக் கோரி பெருமத்தூர் பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

தொடர்புடைய செய்தி